பழங்கால நீராவி ரயில் என்ஜின் வடிவில் புதிய சுற்றுலா ரயில் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
பழங்கால நீராவி ரயில் போல தோற்றம் கொண்ட ரயிலை விரைவில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
நீராவி ரயில்கள் போல தோற்றம் அளித்தாலும், விஸ்டாடோம் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை போன்ற வசதியும் வேகமும் இந்த ரயிலுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த ரயில் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ரயிலாகும்.
"டி ட்ரெயின்" என்று அழைக்கப்படும் இவை, பழங்கால அழகியலும் நவீன அம்சங்களும் ஒன்றிணைந்த ஒரு கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, தெற்கு ரயில்வே மண்டலத்தில் விரைவில் இந்த ரயில் அமல்படுத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சஜிவ்ஜ்க
இந்த ரயிலின் ஒரு பெட்டியில் உணவகம் செயல்படும்
இந்த புதுவித ரயில், தெற்கு ரயில்வேயின் வேகன் ஒர்க்ஸ் மற்றும் பெரம்பூர் கேரேஜ், திருச்சி கோல்டன் ராக் ஒர்க்ஷாப், மற்றும் ஆவடி EMU கார்-ஷெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
இந்த புதிய சுற்றுலா ரயிலுக்காக மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் டிரைவிங் டிரெய்லர் ரயில் பெட்டிகள் பழங்கால நீராவி என்ஜின்கள் போல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
1895ஆம் ஆண்டு இயக்கப்பட்ட உள்நாட்டு நீராவி இன்ஜின்-F734 போல் இந்த ரயில்கள் தோற்றமளிக்கும் என்றும் இந்த ரயிலில் 4 ரயில் பெட்டிகள் இருக்கும் என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் நியூஸ்18 செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் இருக்கும் 4 பெட்டிகளில் மூன்று பெட்டிகள் உட்காரும் வசதியுடன் இருக்கும் என்றும், மற்றொரு பெட்டியில் உணவகம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.