லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி
மென்பொருள் பொறியாளராக பெங்களூர் தனியார்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அகாங்ஷா. இவர் தனது காதலரான அர்பித்குஜரால் என்பவருடன் லீவ்இன்-டூகெதர்-உறவில் இருந்துள்ளனர், இருவருக்கும் இடையே சிலமாதங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டதால் தங்கள் உறவை முறித்துக்கொண்டுள்ளனர். இதனிடையே கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என்றுகூறி அர்பித் டெல்லியிலிருந்து அகாங்ஷாவை பார்க்க பெங்களூருக்கு கடந்த ஜூன்.6ம்தேதி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அகாங்ஷாவை கொலை செய்யும் நோக்கில் வந்தஅவர் வண்டியில் வந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து நடந்தேச்சென்றுள்ளார். தொடர்ந்து,வீட்டில் தனியேயிருந்த அகாங்ஷாவை தலையணை வைத்து கொலைச்செய்த அர்பித், இவ்விவகாரம் வெளிவரும்வரை ஆங்காங்கே தலைமறைவாகயிருந்துள்ளார். காவல்துறையிடம் சிக்காமல் தெளிவாக கொலை செய்யத்திட்டமிட்ட அர்பித்,முன்னதாக டெல்லியிலேயே தனது மொபைல்போனை வைத்துவிட்டு வந்துள்ளார். நேரடியாக பெங்களூர் வராமல் விஜயவாடாவில் தனது துணிகளை அங்கே வைத்துவிட்டு வந்துள்ளார்.
கடந்த 20 நாட்களில் தான் பயணம் மேற்கொண்ட அனைத்து டிக்கெட்களையும் காண்பித்த காதலன்
கொலை செய்தப்பின்னர் 8 கி.மீ.,நடந்தே ரயில்நிலையத்திற்கு சென்று, ஹைதரபாத் வழியே அசாம் சென்று தினக்கூலியாக வேலைச்செய்துள்ளார். அங்கிருந்து மீண்டும் விஜயவாடாவிற்கு சென்ற அர்பித் தனது நண்பருக்கு சொந்தமான இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், இவ்வழக்கினை விசாரித்த காவல்துறை அர்பித் நண்பர் மூலம் அர்பித்தின் தாயாரை அணுகி, அவர்மூலம் டெல்லியில் தலைமறைவாக இருந்த அர்பித் குஜராலை கைது செய்துள்ளார்கள். காவல்துறையிடம் தனக்கும் இக்கொலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றுக்கூறிய அர்பித், திரைப்படப்பாணியில் கடந்த 20 நாட்களில் தான் பயணம் மேற்கொண்ட அனைத்து டிக்கெட்களையும் காண்பித்துள்ளார். பின்னர் காவல்துறை தனது பாணியில் விசாரணைச்செய்ததும், உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். தன்னைவிட்டு பிரிந்த அகாங்ஷா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காக கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.