Page Loader
இன்ஸ்டாகிராம் மூலமாக இரயிலில் உணவு டெலிவரி! அசத்தும் தனியார் சேவை நிறுவனம்!
இரயிலில் உணவு டெலிவரி சேவை நிறுவனம்

இன்ஸ்டாகிராம் மூலமாக இரயிலில் உணவு டெலிவரி! அசத்தும் தனியார் சேவை நிறுவனம்!

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 11, 2023
04:08 pm

செய்தி முன்னோட்டம்

இதுவரை ரயில் பயணங்களின் போது, பல நேரங்களில் நல்ல உணவு கிடைக்காமல் சிரமப்பட்டிருப்போம். இனி அந்தக் கவலை இல்லை. இரயில் பயணம் செய்வர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் புதிய சேவையை தொடங்கியிருக்கிறது, IRCTC-யின் அங்கீகாரம் பெற்ற ஸூப் (Zoop) என்ற நிறுவனம். இந்த சேவையைப் பயன்படுத்த தனியாக எந்த செயலியையும் நாம் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. இன்ஸ்டாகிராம் மூலமாகவே இந்த நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவை வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்ஸ்டாகிராமில் @zoopfood என்ற பக்கத்திற்கு சென்று, அதற்கு 'ஹாய்' என ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பினால் போதும். பின்னர் அதன் சாட்பாட்டுடன் உரையாடி நம்முடைய உணவை நம்மால் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

உணவு டெலிவரி

'ஸூப்'பில் உணவு ஆர்டர் செய்வது எப்படி? 

இதன் சாட்பாட்டுடன் உரையாடும் போது, நமது PNR நம்பர் மற்றும் எந்த ஸ்டேஷனில் டெலிவரி செய்ய வேண்டும் ஆகிய தகவல்களைக் கொடுத்தால் போதும், நமது இரயிலுக்கே வந்து உணவை டெலிவரி செய்து விடுவார்கள். மேலும், பயணங்களின் போது உணவினால் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்று FSSAI அமைப்பின் அங்கீகாரம் பெற்ற உணவகங்களில் மட்டுமே நாம் உணவை ஆர்டர் செய்யும் வகையில் பட்டியலிட்டிருக்கிறார்கள். இட்லியில் தொடங்கி, பொங்கல், பீட்சா, பர்கர், பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை பொடிமாஸ் என அனைத்து விதமான உணவுகளையும் இந்த சேவையின் மூலம் நம்மால் ஆர்டர் செய்து கொள்ள முடியும். தற்போது 150 இரயில் நிலையிங்களில் இந்த சேவையை வழங்கி வருகிறது Zoop. 2024-ல் இதனை 250-ஆக உயர்த்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Instagram அஞ்சல்

Instagram Post