பாக்., பெண் ஏஜென்டிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்த வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊழியர் ஒருவர், பெண் சபலத்தால், பல முக்கியமான அரசு தகவல்களை பாகிஸ்தானிற்கு பகிர்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதன் தொடர்ச்சியாக அந்த ஊழியரை, காவல்துறை கைது செய்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஏஜென்ட் அஞ்சலி. இவர் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். இந்த பெண், வெளியுறவுத்துறை ஊழியர், பிரவீன் பால் என்பவருடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக பல முக்கிய தகவல்களும், கோப்புகளும் பெற்றுக்கொண்டதை அறிந்த உளவுத்துறை, அவரை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது. விசாரணையின் இறுதியில், முக்கிய ஆவணங்களை தனது அலைபேசியில் படம் பிடித்து, அஞ்சலிக்கு அனுப்பியதுடன், அவ்வபோது இருவரும் வீடியோ சாட்டிங் செய்தும் உள்ளதாக, பிரவீன் பால் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பகிரப்பட்ட ஆவணங்களில், ஜி20 நாடுகளின் மாநாடு குறித்த விவரங்களும் அடங்கும்.