இமாச்சலில் கனமழை: வெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட கார்களின் வீடியோ வைரல்
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக என்று செய்திகள் தெரிவிக்கிறது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மீட்பு பணிகள் அப்பகுதிகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சிம்லா-கல்கா இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சோலன் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமாகியுள்ளது. சாலை போக்குவரத்து முடங்கியதால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும் மாண்டி மாவட்டத்தின் ரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு நாளை(ஜூலை.,9) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக காட்டாற்றில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.