NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - மத்திய தலைமை வழக்கறிஞரை சந்தித்த தமிழக ஆளுநர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - மத்திய தலைமை வழக்கறிஞரை சந்தித்த தமிழக ஆளுநர் 
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - மத்திய தலைமை வழக்கறிஞர்களை சந்தித்த தமிழக ஆளுநர்

    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - மத்திய தலைமை வழக்கறிஞரை சந்தித்த தமிழக ஆளுநர் 

    எழுதியவர் Nivetha P
    Jul 11, 2023
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து, தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

    இதனிடையே, தமிழக அரசு அவரை இலாகா இல்லா அமைச்சராக அறிவித்தது.

    ஆனால் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியினை பதவிநீக்கம் செய்வதாக அறிவித்ததோடு, இதுகுறித்து தமிழக முதல்வருக்கு ஒரு கடிதத்தினையும் எழுதி அனுப்பினார்.

    இதற்கு பல தரப்புகளிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தது.

    தமிழக முதல்வர், இந்த விவகாரத்தினை சட்டரீதியாக சந்திக்கத்தயார் என்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் சிலமணிநேரத்திலேயே, ஆளுநர் தனது உத்தரவினை நிறுத்திவைப்பதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையீடு காரணமாகவே ஆளுநர் தனது உத்தரவினை நிறுத்திவைத்துள்ளார் என்று கூறப்பட்டது.

    ஆளுநர் 

    நேற்று(ஜூலை.,10)உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த ஆளுநர்

    அதன்படி, அமித்ஷா மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய, ஆளுநருக்கு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியானது.

    இதனையடுத்து, மீண்டும் இதுகுறித்து மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஆளுநர், 7 நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    அதன்படி, முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த ஆளுநர், அவரிடம் தமிழக அரசியல் சூழல் மற்றும் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து கலந்தாலோசித்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், இன்று(ஜூலை.,11) மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி அவர்களை நேரில் சந்தித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த சந்திப்பில், ஆர்.வெங்கட்ரமணியிடம் ஆலோசனை பெற்று அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் தனது இறுதி முடிவினை எடுப்பார் என்று கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    கைது
    அமித்ஷா
    செந்தில் பாலாஜி

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    அமித்ஷா

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் இந்தியா
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025