Loading...
TNHB-யில் 7,659 வீடுகள், மனைகள் ஆன்லைனில் விற்பனை: விண்ணப்பிப்பது எப்படி?
TNHB-யில் 7,659 வீடுகள், மனைகள் ஆன்லைனில் விற்பனை

TNHB-யில் 7,659 வீடுகள், மனைகள் ஆன்லைனில் விற்பனை: விண்ணப்பிப்பது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2026
11:02 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் விற்பனைக்கு உள்ள ஆயிரக்கணக்கான வீடு மற்றும் மனைகளை பொதுமக்கள் இணையதளம் மூலமாக எளிதாக பெறுவதற்காக, புதிய இணையவழி விற்பனைத் தளத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்துள்ளார். கடந்த ஆண்டில் 2,630 அலகுகள் மட்டுமே மின்னணு முறையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வரலாற்றுச் சாதனையாக 7,659 அலகுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பெறப்படவுள்ளன: குலுக்கல் முறை(2,842 அலகுகள்): ஆகஸ்ட் 21 முதல் விண்ணப்பிக்கலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை(2,184 அலகுகள்): ஆகஸ்ட் 24 முதல் விண்ணப்பிக்கலாம். பொது ஒதுக்கீடு முறை-இடஒதுக்கீடு விகிதாச்சாரமின்றி(1,749 அலகுகள்): ஆகஸ்ட் 25 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

TNHB ஆன்லைன் தளத்தில் விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள பொதுமக்கள் 'TNHB Online Portal' வழியே தங்களது பயனர் பெயர் (User ID) மற்றும் கடவுச்சொல்லை (Password) உருவாக்கி விண்ணப்பிக்கலாம்.

திட்டப்பகுதியை நேரடியாகவோ அல்லது இணையதளம் வழியாகவோ பார்வையிட்டு அலகுகளைத் தேர்வு செய்ய முடியும்.

முன்பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கான வங்கிப் பணப்பரிவர்த்தனை வரம்பைசரிபார்த்துக் கொள்ளுமாறும், தேவையான ஆவணங்களை முன்னரே தயார் நிலையில் வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், வணிக நோக்கத்திற்கான 884 கடைகள், பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள் மின் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதற்கு ஆகஸ்ட் 25, 2026 முதல் செப்டம்பர் 24, 2026 வரை 'Tamil Nadu e-Tenders' இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT