தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்: EPSக்கு அழைப்பு
செய்தி முன்னோட்டம்
எதிர்நோக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், கூட்டணி விவகாரங்களை பேசவும், வரும் ஜூலை 18 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி டெல்லியில் சந்திக்கவுள்ளது.
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மற்றும் ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ளப்போகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கூட்டணி காட்சிகளுக்கு அழைப்புகள் பறந்துள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில், ஆளும் காட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவின் தலைமையில் குழப்பங்கள் நீடித்துக்கொண்டிருக்கும் வேளையில், யாருக்கு அழைப்பு விடப்படும் என பலரும் காத்திருந்தனர். தற்போது அதிமுகவின் பொதுச்செயலராக அறிவிக்கப்பட்டுள்ள, எடப்பாடி கே பழனிசாமிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
சமீபத்தில், அதிமுகவின் ஒரே MP பதவியும் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இபிஎஸ்க்கு அழைப்பு
#BREAKING | தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் - இபிஎஸ்க்கு அழைப்பு #EPS | #BJP | #AIADMK | #Edappadipalanisami | #Delhi pic.twitter.com/MlrEfZMYml
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 11, 2023