பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை திருவல்லிக்கேணி, என்.கே.டி.தேசிய பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11வதுவகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"ஆண்டுதோறும் பிறப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.234கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. அதன்படி இக்கல்வியாண்டிற்கான மிதிவண்டிகள் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயிலும் 4,89,600 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது" என்று தெரிவித்தார். இத்திட்டத்தினை தற்போது உதயநிதி துவக்கிவைத்துள்ளநிலையில், கிராமங்களில் இந்த மிதிவண்டிகளின் விற்பனையினை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் மகளிர் உரிமைத்தொகை 80%பேருக்கு கிடைக்காது என அண்ணாமலை கூறியதற்கு உதயநிதி,"பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.15லட்சம் தருவதாக வாக்குறுதிக்கொடுத்தனர். வெறும் ரூ.15வது கொடுத்தார்களா?"என கேள்வியெழுப்பியுள்ளார்.