
ஹிமாச்சலில் கனமழையால் கடும் பாதிப்பு - தமிழகம் துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
ஹிமாச்சல பிரதேசம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அம்மாநிலத்தின் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளம் காரணமாக பாலங்கள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இழுத்துச்செல்லப்படும் சில வீடியோப்பதிவுகளும் அண்மையில் இணையத்தில் வெளியானது.
அங்கு பெய்த 2 நாள் மழையில், இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஹிமாச்சல பிரதேச சகோதர-சகோதரிகளுக்கு தமிழ்நாடு நிச்சயம் துணை நிற்கும். அங்கு மழையால் ஏற்பட்டுள்ள பேரழிவு தாக்கம் கவலையளிக்கிறது. அங்குள்ளவர்களுக்கு அனைத்து தேவையான உதவிகளும் செய்யப்படும்" என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை
#JustIn | இமாச்சல பிரதேச சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு துணை நிற்கும்! -தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!#SunNews | #HimachalPradeshRains | @mkstalin pic.twitter.com/9ThiVJvFUp
— Sun News (@sunnewstamil) July 10, 2023