NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை 
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை

    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை 

    எழுதியவர் Nivetha P
    Jul 11, 2023
    04:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையினை நடத்தினார்.

    தமிழகத்தில் நிலவும் சட்ட-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பேசவே இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் டி.ஜி.பி.சங்கர் ஜிவால், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதனையடுத்து இக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், "சட்ட ஒழுங்கு காரணமாகவே தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. அடுத்த ஓராண்டு மிக முக்கியமான காலமாகும், பிரச்சனைகளை பெரிதாக விடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள்" என்றும்,

    "நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மிக கவனமாக செயல்படவேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதிச்செய்வது நமது தலையாய கடமை" என்றும் கூறியுள்ளார்.

    அறிவுரை 

    குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை மாற வேண்டும் - மு.க.ஸ்டாலின் 

    தொடர்ந்து பேசிய முதல்வர், பொது மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து, தண்டனை பெறச்செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

    புகார்கள் மீது என்றும் அதிகாரிகள் நடுநிலை தவறாமல், தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், தமிழகத்தில் கள்ளச்சாராயம் குறைந்து காணப்பட்டாலும், அதனை முற்றிலும் அகற்றுவதனை உறுதி செய்ய வேண்டும் என்றும், போதைமருந்து பழக்கம் என்பது தனிநபர் பிரச்சனையில்லை, அது சமூகப்பிரச்சனை. எனவே, அதன்மீதும் தனிக்கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.

    சமூக வலைத்தளங்கள் மூலம் சாதி பிரச்சனைகளை ஏற்படுத்துவோரை கண்டறிந்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றங்களை கண்டறியும் துறையாக மட்டுமில்லாமல், குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக காவல்துறை
    மு.க ஸ்டாலின்
    தமிழக முதல்வர்

    சமீபத்திய

    நானியின் 'HIT 3' Netflix இல் வெளியாகிறது, இந்த தேதியில்! நெட்ஃபிலிக்ஸ்
    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை

    மு.க ஸ்டாலின்

    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மதுரை
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று முதல் துவக்கம்  கருணாநிதி

    தமிழக முதல்வர்

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025