
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 11ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக காவல்துறை உயரதிகாரிகளுடன் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
அதன்படி, இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் காலை 11.30 மணியளவில் வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை
காவலர்களின் பணிச்சுமை குறைப்பது குறித்து ஆலோசனை
அவரையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஐஜி.,க்கள் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தொடர்ந்து இதில் கோவை மாவட்ட டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது.
காவலர்களுக்கு உள்ள பணிச்சுமை காரணமாகவே இது போன்ற தற்கொலைகள் நடக்கிறது, காவலர்களின் பணிச்சுமையினை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள காரணத்தினால் இது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் காவலர்களுக்கு வாரம் ஒரு முறை கட்டாய விடுமுறை குறித்தும் பேசலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.