மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு
செய்தி முன்னோட்டம்
விமான நிலையங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர்களைப் பொருத்த ரூ.1,000 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் AAI (Airport Authority of India) அமைப்பு.
தற்போது உலோகத்தால் ஆன பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கண்டறியும் வகையில், மெட்டல் டிடெக்டர்களே விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை மாற்றி, முழு உடலையும் பரிசோதனை செய்யும் வகையிலான மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட புதிய ஸ்கேனர்களை அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும், நமது கைப்பைகளை சோதனை செய்யவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்ட புதிய ஸ்கேனர்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
AAI அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 43 விமான நிலையங்களில் இந்த புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
எப்போது நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது?
மேற்கூறிய படி 43 விமான நிலையங்களில் பொருத்துவதற்கு 131 முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களையும், 600 கைப்பை ஸ்கேனர்களையும் வாங்கத் திட்டமிட்டிருக்கிறது AAI.
முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களில் அதிகபட்சமாக கொல்கத்தாவில் 13 ஸ்கேனர்களும், சென்னையில் 12 ஸ்கேனர்களும், கோவாவில் 8 ஸ்கேனர்களும் பொருத்தப்படவிருக்கின்றன.
இந்த ஒப்பந்தப் புள்ளியானது செப்டம்பர் மாதம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி செய்யப்பட்ட பிறகே அவை எப்போது விநியோகம் செய்யப்படும் என்பது தெரியவரும். இந்த புதிய ஸ்கேனர்களானது விமான நிலையங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் அமைக்கப்படுகிறது.
தற்போது கைப்பைகளை சோதனை செய்யும் ஸ்கேனர்களில் மின்னணு சாதனங்களை நாம் தனியே எடுத்து வைக்க வேண்டிய இருக்கும். புதிய ஸ்கேனர்களில் அப்படி செய்ய வேண்டிய தேவை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.