Page Loader
லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது 
லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது

லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது 

எழுதியவர் Nivetha P
Jul 10, 2023
01:23 pm

செய்தி முன்னோட்டம்

வடமாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், போன்ற இடங்களில் தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது என செய்திகள் வெளியானது. நேற்று(ஜூலை.,9) காலை நிலவரப்படி அப்பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 153மி.மீ.மழை பதிவாகியுள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 1982ல் ஜூலையில் இவ்வாறு அதிக மழை பெய்துள்ளது, அதற்கு பின்னர் தற்போது அதிகளவு மழை பொழிவு பதிவாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

கனமழை 

கனமழையில் பல கட்டிடங்கள் சேதம் 

இதனை தொடர்ந்து லடாக் யூனியன் பிரதேசம், லே நகரில் கார்யூக் என்னும் பகுதியில் கனமழை பெய்து வருவதாக தெரிகிறது. அப்பகுதியில் நேற்று(ஜூலை.,9)மாலை பெய்த கனமழையில் 450 ஆண்டுகால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த ஊரில் வசிக்கும் ஹைதர் என்பவர் கூறுகையில், "இப்பகுதியில் இந்த கட்டிடமானது 450 ஆண்டு கால பழமைவாய்ந்தது. இங்கு பெய்த கனமழை காரணமாகவே தற்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் "கடந்த 2010ம் ஆண்டு மேகவெடிப்பு (Cloud burst) நேர்ந்த பொழுது கூட இந்தளவுக்கு பாதிப்பில்லை. ஆனால், இம்முறை பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது" என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.