Page Loader
பத்திரப்பதிவு சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது - தமிழக அரசு 
பத்திரப்பதிவு சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது - தமிழக அரசு

பத்திரப்பதிவு சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது - தமிழக அரசு 

எழுதியவர் Nivetha P
Jul 10, 2023
12:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு துறையில் முத்திரை தீர்வை, ஆவணப்பதிவு உள்ளிட்ட சேவைக்கான கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கட்டண உயர்வானது இன்று(ஜூலை.,10) முதல் அமலானது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இந்த பத்திரப்பதிவு துறையின் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. இது குறித்து பதிவுத்துறை மற்றும் வணிகம் வரித்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி ஓர் செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், "பதிவுத்துறை வழங்கிவரும் ஆவணப்பதிவு, ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனங்களிலுருந்து ஆவணத்திற்கான நகல்களை எடுத்து வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை அடிப்படையாக கொண்டு கட்டண வீதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

பத்திரப்பதிவு 

மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டண வீதங்கள் 

மேலும் அவரது செய்திக்குறிப்பில், 1908ன் 78வது பிரிவில் பதிவுச்சட்டத்தில் கட்டண விவர அட்டவணையில் 20 இனங்களுக்கான கட்டண வீதங்கள், ஆவணப்பதிவுகள் மற்றும் முத்திரை கட்டண வீதங்கள் ஆகியன மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதில், குடும்ப நபர்கள் மத்தியிலான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவுக்கட்டணம் 4ல் இருந்து 10ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரசீது ஆவணப்பதிவு கட்டணமானது ரூ.20ல் இருந்து 200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முத்திரை தீர்வை கட்டணமானது 25 ஆயிரத்திலிருந்து 40,000மாகவும், தனிமனைக்கான பதிவுக்கட்டணம் 200ல் இருந்து ரூ.1,000மாகவும், பொது அதிகார ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் 10,000ல் இருந்து சொத்தின் சந்தை மதிப்பிற்கு 1% என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.