LOADING...
செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை
செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை!

செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 11, 2023
10:40 am

செய்தி முன்னோட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளதாக, அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், வருமான வரித்துறையினரும் அவர் சார்ந்த இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே இரு முறை, கரூரில் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை செய்தது நினைவிருக்கலாம். அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், அவர்களை தாக்கி, அவர்கள் வந்த அரசாங்க வாகனங்களை சேதப்படுத்தினர். இதற்காக வழக்கும் பதியப்பட்டுள்ளது. தற்போது, 3வது கட்டமாக மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக கூறப்படும், கொங்கு மெஸ் மணி என்பவருக்கு சொந்தமான இடங்களில், துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

வருமான வரித்துறை சோதனை