NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Jul 10, 2023
    06:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர், சிதம்பரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் ஒன்று எழுந்தது.

    இச்சம்பவம் கடந்தாண்டு நடந்துள்ள நிலையில், அண்மையில் அது தொடர்பான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலானது.

    இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், சிறுவர்-சிறுமியின் பெற்றோர்களை போலீசார் கைது செய்தனர் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று(ஜூலை.,10) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது காவல்துறை சார்பில், சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதுமே தவறில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    காவல்துறையின் இந்த விளக்கத்தினை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    உத்தரவு 

    காவலர்களின் நடவடிக்கை குறித்து நீதிபதிகள் அதிருப்தி 

    இருப்பினும், இந்த பாலியல் வழக்கு தொடர்பாக இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் நடந்த இளம் வயது திருமணம் குறித்த வழக்கில் 17 வயதுக்குட்பட்ட இரண்டு பேரையும் காவலர்கள் நடத்திய விதம் குறித்து நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    அதற்கு, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    மேலும், இது போன்ற பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    கடலூர்
    கைது

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    காவல்துறை

    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம்  சென்னை
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது  ஜம்மு காஷ்மீர்
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    காவல்துறை

    தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர் அமெரிக்கா
    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தமிழ்நாடு
    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  செந்தில் பாலாஜி
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025