
பிஞ்சு குழந்தைகளை காவு வாங்கிய பள்ளிப்பேருந்து விபத்து: வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டெல்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை, பள்ளிப்பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது.
அதில், பள்ளி குழந்தைகள் இருவர் உட்பட, 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, காவல்துறை விசாரித்ததில், பள்ளிப்பேருந்து கிட்டத்தட்ட 9 கீ.மி தூரம், தவறான பாதையில் பயணம் செய்ததாகவும், அப்போது, அதிவேகத்தில் எதிரே வந்த SUV மீது மோதி, இந்த கோர விபத்து சம்பவித்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்த விபத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விபத்திற்கு காரணமான பள்ளிப்பேருந்து ஓட்டுநர், கைது செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பள்ளிப்பேருந்து விபத்து
WATCH - School Bus-SUV Crash On Delhi-Meerut Expressway Near Ghaziabad, 6 Dead.#BusAccident #Ghaziabad #DelhiMeerutExpressway pic.twitter.com/djl7m4CZRp
— TIMES NOW (@TimesNow) July 11, 2023