ட்விட்டர் நிறுவனம் செய்த குளறுபடி: கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை இந்திய பகுதியாகக் காட்டியதால் எழுந்த சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகக் காட்டியிருக்கிறது ட்விட்டர் தளம். மேலும், கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியானது, இந்தியாவின் ஜம்மூ காஷ்மீர் பகுதியில் இருப்பதாகவும் காட்டியிருக்கிறது அந்த தளம்.
அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்களது லொகோஷனை ஆன் செய்த பின்பும் கூட கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாகவே காட்டியிருக்கிறது ட்விட்டர் தளம்.
கில்கிட்-பாகிஸ்தான் பகுதியில் உள்ள ட்விட்டர் பயனர்களுக்கு, ட்விட்டரில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ பக்கம் முடக்கப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டதையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தியா
ஏன் அப்பகுதி மக்களுக்கு பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக காட்டப்பட்டிருக்கிறது?
இந்தியாவில் கடந்த மார்த் மாதத்தில் இருந்தே இந்திய அரசின் ஆணைக்கிணங்க பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர், இந்தியாவில் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறது.
கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி இந்திய பகுதியாக காட்டப்பட்டதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த ட்விட்டர் பயனர்களுக்கு பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் காட்டப்படவில்லை.
ட்விட்டர் தளத்தில் இது குறித்து அப்பகுதி மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கிஸ்கிட்-பால்டிஸ்தானின் நிலைப்பாட்டை ட்விட்டர் அவமரியாதை செய்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டும் இதே போன்று இரண்டு முறை பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.