இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

வாரம் 70 நேரம் வேலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது

காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய 70 மணிநேர வேலை குறித்து பேசியுள்ளார்.

2ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 15ம்.,தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

10 Nov 2023

சென்னை

' தூர்தர்ஷன் பொதிகை' சேனல், 'டிடி தமிழ்' என பெயர்மாற்றம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

சென்னை சேப்பாக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று(நவ.,10)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

10 Nov 2023

சென்னை

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி

சென்னை துறைமுகத்தில் உள்ள கோஸ்டல் பர்த் பிளேஸ் என்னும் இடத்தில் ஒடிசா மாநிலத்திலிருந்து எண்ணெய் ஏற்றி செல்லக்கூடிய கப்பல் ஒன்று கடந்த 31ம் தேதி வந்துள்ளதாக தெரிகிறது.

10 Nov 2023

கைது

சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது 

சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதியிலுள்ள கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் வீரபத்திர சுவாமியின் திருக்கோயில் அமைந்துள்ளது.

10 Nov 2023

இந்தியா

இந்தியா-அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம்

இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளின் இடையே நல்லுறவு தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று(நவ.,10)டெல்லியில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 Nov 2023

மும்பை

மும்பை பாந்த்ரா சுங்கச்சாவடியில் கார் விபத்து: மூவர் பலி, 12 பேர் காயம்

மும்பையில் உள்ள பாந்த்ரா வோர்லி சீ லிங்கில் உள்ள சுங்கச்சாவடியில், நேற்று, வியாழக்கிழமை இரவு, வேகமாக வந்த எஸ்யூவி, பல வாகனங்களை மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

10 Nov 2023

டெல்லி

டெல்லியில் பெய்த மிதமழைக்கு பிறகு, காற்றின் தரம் சற்றே உயர்வு

தலைநகர் டெல்லியில் இன்று காலை பெய்த லேசான மழைக்குப் பிறகு, மாசுகாற்றும், மூடுபனியும் சற்றே குறைந்துள்ளது.

10 Nov 2023

மழை

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமழை வாய்ப்பு 

தமிழகத்தின் தெற்கு கடல்பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

தொடரும் சனாதன சர்ச்சை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் 

அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்களை பதிவுச்செய்தார்.

09 Nov 2023

பருவமழை

தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல் 

தமிழ்நாடு மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று சர்வதேச ஆயுர்வேத தினத்தினை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிலே கலந்துகொண்டுள்ளார்.

மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவை, மக்களவையில் இருந்து தகுதி நீக்க பரிந்துரை செய்யும் அறிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஏற்றது.

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு 

கோவை தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவரை 7 சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த விவகாரத்தில் அவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

09 Nov 2023

கடற்படை

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு

அறியப்படாத காரணங்களுக்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட எட்டு கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக கத்தார் அதிகாரிகளிடம் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்றும்(நவ.,9)அதேப்பகுதியில் நிலவி வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09 Nov 2023

பீகார்

பீகாரில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

மாநில வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை பீகார் சட்டசபை வியாழக்கிழமை (நவம்பர் 9) ஒருமனதாக நிறைவேற்றியது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

09 Nov 2023

இந்தியா

உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு

உலகளவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 75 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரானது நவம்பர் மாதம் 3ம் வாரத்தில் துவங்குவது வழக்கம்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற நபர்கள், தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விரிப்பது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

09 Nov 2023

இந்தியா

காதி கிராமோதயா சங்கத்திற்கு ரூ.95 கோடி நிலுவை வைத்துள்ள மாநில அரசு

நாட்டிலேயே இந்தியாவின் தேசிய கொடியினை தயாரிக்கும் ஒரே அமைப்பு காதி கிராமோதயா சம்யுக்தா சங்கம் தான்.

09 Nov 2023

கேரளா

73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்த 97 வயது முதியவர் 

கேரளா பாலக்காடு மாவட்டத்தினை பி.பாலசுப்ரமணியன் மேனன்(97), 73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் தொடர்ந்து பணியாற்றிய நிலையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை

ஒவ்வொரு வருடமும் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை, பிரிட்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்(கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

09 Nov 2023

டெல்லி

நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம் 

டெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்றின் தரம் கடுமையாக சரிந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை பெய்யத் திட்டமிட்டுள்ளது.

"மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்றலாம்": 500 பக்க அறிக்கையில் நெறிமுறைகள் குழு

திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவை எம்.பி.யாக நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

08 Nov 2023

தீபாவளி

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு 

தமிழ்நாடு மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 20%தீபாவளி போனஸ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தடையை மீறி ரயில்களில் பட்டாசுகள் எடுத்து சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் 

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

08 Nov 2023

மழை

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை சரியாக பெய்யாத காரணத்தினால் அணையின் நீர் இருப்பு குறைந்தது.

08 Nov 2023

மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தகவல்

தீபாவளி பண்டிகை வரும் 12ம்.,தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணம் மேற்கொள்வார்கள்.

தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள்

தமிழக மருத்துவத்துறை மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சிறப்பு தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளை இன்று(நவ.,8) துவங்கி வைத்துள்ளார்.

08 Nov 2023

டெல்லி

மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை 

பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சி மற்றும் டி-பிரிவு பணியாளர்களுக்கு 2022-23ம் ஆண்டிற்கான 8.33% போனஸ் மற்றும் 11.67%கருணைத்தொகை என மொத்தம் 20%போனஸ் தொகையாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல் 

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார்களை மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

08 Nov 2023

தீபாவளி

நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா?

தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் பரோட்டா மாஸ்டராக மாறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்னும் நடைப்பயணத்தினை தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.

08 Nov 2023

கனமழை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும்(நவ.,8), நாளையும்(நவ.,9) இடிமின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

24 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 

தமிழக வானிலை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்திற்குள் வலுவிழக்கூடும். மேலும், குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

08 Nov 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(நவம்பர் 7) 5ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 11ஆக பதிவாகியுள்ளது.

08 Nov 2023

இந்தியா

நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள் 

ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.