NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது
    நெறிமுறைகள் குழு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து,மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

    மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது

    எழுதியவர் Srinath r
    Nov 09, 2023
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவை, மக்களவையில் இருந்து தகுதி நீக்க பரிந்துரை செய்யும் அறிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஏற்றது.

    இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில், 6-4 என்ற வாக்குகளில் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    நெறிமுறைகள் குழுவில் இடம்பெற்று இருந்த 5 எம்பிக்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த பிரனீத் கவுர் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், 4 எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர்.

    இந்த அறிக்கை, நாளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கப்பட உள்ளது. மேலும் இது குறித்து அவர் முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணம் வாங்கிய விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, நெறிமுறைகள் குழு மத்திய அரசிடம் விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

    நாடாளுமன்றத்தில் அதானி, பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி கேட்க, ஹிராநந்தனி குழுமத்தின் தர்ஷனிடம் பணம் மற்றும் வெகுமதி வாங்கியதாக பாஜக எம்பி, மக்களவை சபாநாயகர் இடம் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரை, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் விசாரணைக்கு சபாநாயகர் பரிந்துரைத்தார்.

    இப்புகார் குறித்து விசாரித்து வந்த நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, நாடாளுமன்ற லாகின் ஐடியை வெளிநபருடன் பகிர்ந்துகொண்டதற்காக "நெறிமுறையற்ற நடத்தை" மற்றும் "சபையின் அவமதிப்பு" உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.

    மேலும், மொய்த்ராவின் செயலை 'கடுமையான தவறு' என கூறிய நெறிமுறைகள் குழு, இது குறித்து இந்திய அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டரீதியான விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தது.

    தற்போது, நெறிமுறைகள் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாக்கெடுப்பு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிணாமுல் காங்கிரஸ்
    காங்கிரஸ்
    மத்திய அரசு
    பிரதமர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    திரிணாமுல் காங்கிரஸ்

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் மேற்கு வங்காளம்
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா

    காங்கிரஸ்

    படங்கள்: லடாக்கில் 'பைக் ரைடு' செய்த ராகுல் காந்தி  லடாக்
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி  ராகுல் காந்தி
    ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ  லடாக்
    2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா? ராகுல் காந்தி

    மத்திய அரசு

    பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்  கோவை
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு நீட் தேர்வு
    புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள்  வந்தே பாரத்
    உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு  விலை

    பிரதமர்

    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி இந்தியா
    ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி இந்தியா
    ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரித்ததாக அமெரிக்கா தகவல் அமெரிக்கா
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் லெபனான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025