Page Loader
தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல் 
தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல்

தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல் 

எழுதியவர் Nivetha P
Nov 09, 2023
08:10 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று சர்வதேச ஆயுர்வேத தினத்தினை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிலே கலந்துகொண்டுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு எளிதில் செரிமானமாகக்கூடிய புது வகை ஆயுர்வேத லேகியம் ஒன்றினை அக்கல்லூரி சார்பில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் டெங்கு, மலேரியா, போன்ற மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

டெங்கு 

டெங்கு பரவல் டிசம்பர் மாதம் வரை தொடரும் என தகவல் 

இதனை தொடர்ந்து அவர், "இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 இடங்களில் மாநிலம் முழுவதும் வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது" என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று(நவ.,8) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெங்கு பரவல் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியம், "தமிழகத்தில் தற்போது வரை 6,345 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் பரவல் வரும் டிசம்பர் மாதம் வரை தொடரும்" என்று பதிலளித்துள்ளார். தொடர்ந்து டெங்கு பரவல் மழைக்காலத்தில் தேங்கும் மழைநீரில் உற்பத்தியாகும் ஏடிஎஸ் கொசுக்களால் அதிகரிக்கும் என்றும், வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் இந்தாண்டு தொடர்ச்சியாக தென்மேற்கு பருவமழை, கோடை மழை என பெய்தாலும் கட்டுக்குள் தான் உள்ளது என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.