NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாரம் 70 நேரம் வேலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாரம் 70 நேரம் வேலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது
    வாரம் 70 நேரம் வேலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது

    வாரம் 70 நேரம் வேலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 10, 2023
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய 70 மணிநேர வேலை குறித்து பேசியுள்ளார்.

    நாராயணமூர்த்தி, இந்தியாவின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய ஆலோசனையை, மணீஷ் திவாரி ஒப்பு கொண்டுள்ளார்.

    எக்ஸ்இல் பதிவிட்டுள்ள மணீஷ் திவாரி, வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்வது, ஒரு நாள் விடுமுறை எடுப்பது மற்றும் ஆண்டுதோறும் 15 விடுமுறை நாட்கள் என்பது நிலையான நடைமுறையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

    சுவாரஸ்யமாக, வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கத்தை குறிவைத்து,"போதுமான வேலை இருந்தால்", 70 மணிநேரம் உழைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    card 2

    நாராயணமூர்த்தி கூறியது என்ன?

    கடந்த வாரம், நாராயணமூர்த்தி, இந்தியாவில் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் உழைத்து நாட்டின் உற்பத்தியை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி, ஒரு விவாதத்தைத் தூண்டினார்.

    முன்னாள் இன்ஃபோசிஸ் சிஎஃப்ஓ மோகன்தாஸ் பாய் தொகுத்து வழங்கிய போட்காஸ்டில் பேசிய அவர், இந்தியாவின் பணி உற்பத்தித்திறன் உலகளவில் மிகக் குறைந்த தரவரிசையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

    சீனா மற்றும் ஜப்பான் போன்ற சிறந்த பொருளாதாரங்களுடன் போட்டியிடும் வகையில் இளைஞர்கள் தங்கள் வேலைகளுக்கு அதிக மணிநேரங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

    "நாம் நமது வேலை உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும்," என்று அவர் கருத்து தெரிவித்தார்

    card 3

    ஞாயிற்றுகிழமைகளிலும் வேலை செய்யும் மணீஷ்

    நாராயணமூர்த்தியின் கருத்தை ஆமோதித்து மணீஷ் திவாரி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாமே வேலை செய்வதாகவும், கடைசியாக அவர் வார இறுதி விடுமுறையை அனுபவித்ததாக நினைவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இளைய தலைமுறையினருக்கான, கட்டுக்கோப்பான பணி நெறிமுறையின் முக்கியத்துவத்தை மணீஷ் வலியுறுத்தினார்.

    "இந்தியா ஒரு பெரிய சக்தியாக மாற வேண்டும் என்றால் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் கூட வாரத்திற்கு 70 மணிநேரத்தை தங்கள் பணி நெறிமுறையாக மாற்ற வேண்டும்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஏராளமான பொது அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தினமும் 12-15 மணிநேரம் தங்கள் பணிக்காக அர்ப்பணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மணீஷ் திவாரியின் ட்வீட்

    I do not understand the brouhaha around @Infosys_nmurthy statement on a 70 hour work week . What is wrong with it ?

    Some of us Public Representatives work 12-15 hours a day 7 days a week balancing careers with Public Service.

    I do not recall when I last took a Sunday off.…

    — Manish Tewari (@ManishTewari) November 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காங்கிரஸ்

    ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ  லடாக்
    2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா? ராகுல் காந்தி
    மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம் பாஜக
    ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள் ஆதித்யா L1
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025