
தொடரும் சனாதன சர்ச்சை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
செய்தி முன்னோட்டம்
அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்களை பதிவுச்செய்தார்.
இதுப்பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
சனாதனத்திற்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் விசாரணையிலுள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று(நவ.,9)சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, "சனாதன தர்மம் குறித்து நான் பேசியது பேசியது தான். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை" என்றும்,
"சட்டப்படி எதுவானாலும் சந்திக்க தயார், பின்வாங்க மாட்டேன்" என்றும் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சர் உதயநிதியின் உரை
#WATCH | நீங்க என்ன பண்ணுனாலும் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் பேசியது பேசியது தான் எதுனாலும் சட்டப்படி சந்திப்போம் பின்வாங்க மாட்டேன்.
— Kalaignar Seithigal (@Kalaignarnews) November 9, 2023
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!#UdhayanidhiStalin | #DMK | #KalaignarSeithigal pic.twitter.com/zxFxrRxQCx