இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
15 Nov 2023
தமிழகம்9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது.
15 Nov 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 14) 18ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 10ஆக பதிவாகியுள்ளது.
15 Nov 2023
மு.க ஸ்டாலின்அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா(102) காலமானார்.
15 Nov 2023
காங்கிரஸ்டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு
ராஜஸ்தான், கரன்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர்(75) கடந்த 12ம் தேதி டெல்லி எய்ம்ஸ் முதியோர் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
15 Nov 2023
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 36 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
15 Nov 2023
சென்னைகூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு
கடந்த 2022ம்.,ஆண்டு சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பேட்டரி ரிலே பெட்டியினை திருடியதாக ரயில்வே பாதுகாப்புப்படை தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
15 Nov 2023
தமிழ்நாடுதமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு
பருவமழை துவங்கி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியுள்ளது.
15 Nov 2023
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102.
15 Nov 2023
காற்றழுத்த தாழ்வு நிலைஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உண்டான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அங்கேயே நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Nov 2023
உத்தரகாண்ட்நிலச்சரிவால் உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தாமதம்
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 70 மணி நேரத்திற்கும் மேலாக தொடந்து நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் மீட்பு பணியில் இடையீறு ஏற்பட்டுள்ளது.
14 Nov 2023
சோனியா காந்திடெல்லி மாசுக்காற்று: மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி
டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. 'தீவிரம்' என்ற AQI அளவில் உள்ள காற்றினால், பலருக்கும் உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
14 Nov 2023
திருச்சிதிருச்சி: பட்டாசை கொளுத்தியபடி, பைக்கில் வீலிங் செய்த வாலிபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து
திருச்சியை சேர்ந்த 'டெவில் ரைடர்ஸ்' என்கிற குழு ஒன்று, தீபாவளி அன்று, காவேரி பாலத்தின் மீது மத்தாப்பை கொளுத்தியபடி, பைக்கில் வீலிங் செய்த வீடியோ ஒன்று வைரலானது.
14 Nov 2023
இந்தியாநாய் கடித்தால் பல் பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு
நாய் கடி தொடர்பான வழக்குகளில், நாயின் ஒரு பல் பட்ட இடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் 0.2 செ.மீ காயத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
14 Nov 2023
பள்ளிக்கல்வித்துறைஅரசு பொது தேர்வு அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மழைக்காலத்தில் அறிவிக்கப்படும் விடுமுறைகளினால், பள்ளிகளில் பாடத்திட்டங்களை எவ்வாறு முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விளக்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
14 Nov 2023
திமுகசாதிக்குள் திருமணம் முடிப்போம் என்று சிறுமிகளை உறுதிமொழி எடுக்க வைத்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை
திமுக கூட்டணி கட்சிகளுள் ஒன்றான கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, கவுண்டர் இனத்தைச் சேர்ந்த ஆண்களை தான் திருமணம் செய்து கொள்வோம் என்று கவுண்டர் இன பெண்களை உறுதிமொழி எடுக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
14 Nov 2023
தமிழ்நாடுவானிலை அறிக்கை: 14 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
14 Nov 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 13) 8ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 18ஆக பதிவாகியுள்ளது.
14 Nov 2023
கர்நாடகாகர்நாடகா: தேர்வுகளின் போது ஹிஜாப் போன்ற முக்காடுகள் அணியத் தடை
கர்நாடகா: ப்ளூடூத் சாதனங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுதல் போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆட்சேர்ப்புத் தேர்வுகளின் போது எந்த வகையான தலைக்கவசங்களையும் அணியக்கூடாது என்று கர்நாடக தேர்வு ஆணையம்(KEA) அறிவித்துள்ளது.
14 Nov 2023
முதல் அமைச்சர்தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து
இன்று நவம்பர் 14 , தேசிய குழந்தைகள் தினம்.
14 Nov 2023
கேரளாஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு
கடந்த ஜூலை மாதம், கேரளாவின் ஆலுவாவை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்ப்பட்டுள்ளது.
14 Nov 2023
தேர்வுதமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
14 Nov 2023
காற்றழுத்த தாழ்வு நிலைவங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வுநிலையாக உருமாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
14 Nov 2023
டெல்லிதீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது
தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதிகமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி காற்றின் தரம் பல இடங்களில் 'கடுமையானது' என்ற நிலைக்கு மாறியது.
14 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க 48 மணி நேரத்திற்கும் மேலாக ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
14 Nov 2023
மாவட்ட ஆட்சியர்கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
14 Nov 2023
தீபாவளிதீபாவளி கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை என தகவல்
கடந்த ஞாயிற்றுகிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
13 Nov 2023
முதல் அமைச்சர்ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின்
நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
13 Nov 2023
கம்யூனிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13 Nov 2023
இந்தியாஅமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு
கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க தூதரகம் இன்று(நவ 14) அறிக்கையில்(ODR) தெரிவித்துள்ளது.
13 Nov 2023
சென்னைநவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம்
சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் (Terminal 4) மேற்கொள்ளப்பட்டு வந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரவிருக்கிறது AAI (Airport Authority of India).
13 Nov 2023
தமிழகம்7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றக்கூடும். அதன் பின், அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாகவும்,
13 Nov 2023
நாடாளுமன்றம்பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை
பொருளாதார குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது எனவும், அவர்களை கொலை, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுடன் இணைக்க கூடாது எனவும் பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
13 Nov 2023
தமிழ்நாடுதமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில், ₹467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
13 Nov 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 12) 17ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 8ஆக பதிவாகியுள்ளது.
13 Nov 2023
உத்தரப்பிரதேசம்ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பெண் ஊழியர் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததற்காக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 Nov 2023
கனமழைவங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும்
நாளை, நவம்பர் 14 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Nov 2023
மிசோரம்மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை: இந்திய எல்லையில் பதட்டம்
மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நேற்று மாலை முதல் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததை அடுத்து, மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Nov 2023
ஹைதராபாத்ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்-நாம்பள்ளியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருக்கும் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 9 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.
13 Nov 2023
ராஜஸ்தான்உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு
ராஜஸ்தான்: உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லால் டெலியினை கொலை செய்த கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.
13 Nov 2023
டெல்லிஉலகளவில் மிகவும் மாசுபட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
நேற்று நாடு முழுவதும் பட்டாசுகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டதை அடுத்து, 3 முக்கிய இந்திய மெட்ரோ நகரங்கள் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டாப் இடத்தை பிடித்துள்ளன.