
டெல்லி மாசுக்காற்று: மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. 'தீவிரம்' என்ற AQI அளவில் உள்ள காற்றினால், பலருக்கும் உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே சுவாசபிரச்சனையால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மருத்துவர்களின் அறிவுரைப்படி, சிலகாலம் ஜெய்ப்பூரில் தங்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை, அவர் ஜெய்ப்பூரிலேயே தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ராஜஸ்தானில் இம்மாதம் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி தான் ஆண்டு வருகிறது.
ஆட்சியை தக்கவைக்க ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நேரத்தில், சோனியா காந்தியும் அங்கே செல்வது, கட்சிக்கு கூடுதல் பலம் என்கிறார்கள் கட்சி தொண்டர்கள்.
ட்விட்டர் அஞ்சல்
ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி
டில்லியில் காற்று மாசு; ஜெய்ப்பூர் போகிறார் சோனியா!#SoniaGandhi|#FormerCongresspresident|#Delhiairpollution|#Jaipurhttps://t.co/BLvI0poN9b pic.twitter.com/98fJt3OXZW
— Dinamalar (@dinamalarweb) November 14, 2023