Page Loader
ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு 
குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியாகியுள்ளன.

ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு 

எழுதியவர் Sindhuja SM
Nov 14, 2023
01:13 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜூலை மாதம், கேரளாவின் ஆலுவாவை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்ப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் ஆலுவா மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த ஜூலை 28ஆம் தேதி திடீரென மாயமானார். எங்கு தேடியும் தங்களது குழந்தை கிடைக்காததால் அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனையடுத்து இந்த பிரச்சனையை விசாரிக்க தொடங்கிய போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் மூலம், காணாமல் போன குழந்தையை அப்பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த ஒரு புலம்பெயர் தொழிலாளி அழைத்து சென்றது தெரிய வந்தது.

ட்ஜ்வ்ஜ்ஞ

30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார் 

இந்நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், புலம்பெயர் தொழிலாளி அஸ்பாக் ஆலமை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த 5 வயது சிறுமியை அஸ்பாக் ஆலம், கடத்தி, பலாத்காரம் செய்து, கொலை செய்துவிட்டு அந்த சிறுமியின் உடலை குப்பை தொட்டியில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, கொலை, பலாத்காரம் உட்பட 16 பிரிவுகளின் கீழ் அஸ்பாக் ஆலம் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். சம்பவம் நடந்த 30 நாட்களில் அஸ்பாக் ஆலமுக்கு எதிராக 800 பக்க குற்றப்பத்திரிக்கை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 110 நாட்களுக்குள் இந்த வழக்கில் அஸ்பாக் ஆலம் தான் குற்றவாளி என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியாகியுள்ளன.