Page Loader
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு
இந்திய இளங்கலை மாணவர்களின் எண்ணிக்கையும் 16% அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு

எழுதியவர் Sindhuja SM
Nov 13, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க தூதரகம் இன்று(நவ 14) அறிக்கையில்(ODR) தெரிவித்துள்ளது. 2009-10 க்குப் பிறகு முதல் முறையாக இந்தியா, அமெரிக்க சர்வதேச பட்டதாரிகளின் மிகப்பெரும் ஆதாரமாக உருவெடுத்துள்ளது. இந்திய பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்து, 165,936 மாணவர்களாக தற்போது உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 64,000 அதிக இந்திய மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுள்ளனர். இந்திய இளங்கலை மாணவர்களின் எண்ணிக்கையும் 16% அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் படிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள் 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post