இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

08 Nov 2023

டெல்லி

காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் குளிர்கால விடுமுறை: டெல்லியில் அதிரடி 

6 நாட்களாக தொடர்ந்து காற்று மாசுபாட்டினால் டெல்லி பாதிக்கப்பட்டு வருவதால், நவம்பர் 9 முதல் 18 வரை டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அரசு இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.

டிக்கெட் விலை அதிகரிப்பு: ஆம்னி பேருந்து குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து சேவைகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

08 Nov 2023

கொரோனா

சென்னை ஐஐடி மாணவர்களின் குறைதீர்ப்பாளராக ஜி.திலகவதி நியமனம் 

சென்னை ஐஐடி மாணவர்களுக்கான குறைகளை கேட்டு அதனை தீர்த்து வைக்க ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரியான ஜி.திலகவதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

08 Nov 2023

இந்தியா

12 நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: JN.1 கொரோனா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை

முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட JN.1 வகை கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(CDC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மகப்பேறு உதவி திட்டத்தில் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை, மத்திய அரசின் நிதி விடுவிப்பு இத்திட்டத்தின் செயலாக்கத்தை பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.

மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரரின் தாய் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.

08 Nov 2023

என்ஐஏ

என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது; போலி ஆதார் கொண்டு வசித்துவந்தது அம்பலம்

இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது.

08 Nov 2023

பீகார்

சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 

நேற்று பிற்பகல் பீகார் சட்டசபையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு குறித்து பேசும் போது, "இழிவான" மற்றும் "கொச்சையான" சொற்களை பயன்படுத்தியதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று மன்னிப்பு கேட்டார்.

தமிழகத்தில் 64.22 லட்சம் பேர் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல் 

தமிழ்நாடு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 64.22லட்சம் பேர் அரசு பணிக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

08 Nov 2023

கோவை

கோவை தனியார் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள புகழ் பெற்ற தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 7 இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

08 Nov 2023

டெல்லி

டெல்லி காற்று மாசுபாடு: தொடர்ந்து 6வது நாளாக நச்சுப் புகைமூட்டத்தால் திணறும் தலைநகரம் 

டெல்லி காற்றின் தரம் நேற்று கொஞ்சம் மேம்பட்டதை அடுத்து, இன்று காலை அதன் தரம் 'மிகவும் மோசமானது' என்ற நிலையில் இருந்து 'மோசமானது' என்ற நிலைக்கு மாறியது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல் 

மணிப்பூரில் நேற்று நடந்த வன்முறையில் 2 போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

08 Nov 2023

சென்னை

வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை

இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது 

வரும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர்-12, தீபாவளி திருநாள். இதற்காக தற்போது சென்னை நகரின் பல முக்கிய இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

07 Nov 2023

இந்தியா

ராஞ்சியில் இன்று திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா துவங்கப்பட்டது

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று(நவ.,7) துவங்கி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

07 Nov 2023

தீபாவளி

தீபாவளி பண்டிகை : சென்னை-நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை 

தீபாவளி பண்டிகை வரும் 12ம்.,தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

19 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக வானிலை: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

07 Nov 2023

ஆந்திரா

ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் பலி: ஆந்திர பேருந்து நிலையத்தில் பரிதாபம் 

ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

'தொகுதி பங்கீட்டால் INDIA கூட்டணி கட்சிகளுக்குள் சலனம்': உமர் அப்துல்லா கவலை 

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்திருக்கும் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

07 Nov 2023

தீபாவளி

தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

தீபாவளி பண்டிகை வரும் 12ம்-தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை 

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தை வெடிக்கச் செய்வதாக விடுத்த எச்சரிக்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ்18 தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு உத்தர பிரதேச நகரத்தின் பெயர் மாற்றம்: 'ஹரிகார்' ஆகிறது 'அலிகார்'

அலகாபாத்திற்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் உள்ள மற்றொரு முக்கிய நகரத்தின் பெயர் மாற்றப்பட இருக்கிறது.

07 Nov 2023

பீகார்

'42% பட்டியலினத்தவர்கள் வறுமையில் வாடுகின்றனர்': பீகார் சாதி கணக்கெடுப்பால் வெளிவந்த அதிர்ச்சி தகவல் 

215 பட்டியலின சாதிகள், பழங்குடியின சாதிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பொருளாதார நிலையை விவரிக்கும் பீகார் அரசின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் இரண்டாம் பகுதி இன்று பீகார் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

07 Nov 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(நவம்பர் 6) 8ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 5ஆக பதிவாகியுள்ளது.

அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் 

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

07 Nov 2023

விபத்து

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை

தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவரது நினைவிற்கும் வருவது பட்டாசுகள் தான்.

07 Nov 2023

மும்பை

மும்பையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 'எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி' சேவை

மும்பையில் புதுவகையான போக்குவரத்து முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. கடலோரத்தில் அமைந்திருக்கும் மும்பை நகரில் புதிதாக, எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி போக்குவரத்து முறையானது, வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு

தென் உள் கர்நாடகாவில்(SIK) வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால், நேற்று பெங்களூரில் கடும் கனமழை பெய்தது.

07 Nov 2023

தேனி

வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து 

டெல்லியின் காற்று மாசுபாடு அரசியல் போராட்டமாக மாறிவிட கூடாது என்று இன்று கூறிய உச்சநீதிமன்றம், மூச்சுத் திணறும் காற்று மாசுபாடு "மக்கள் ஆரோக்கியத்தின் கொலைக்கு" காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சென்னைவாசிகளுக்கு தினமும் 1,000 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு  

சென்னை மக்களுக்கு தினமும் 1,000 எம்.எல்.டி.குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை

சமீபத்தில் சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்

சட்டசபைகளால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மீதான நடவடிக்கையை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதாக பல மாநிலங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

07 Nov 2023

மிசோரம்

நான்காவது முறையாக முதலமைச்சர் ஆவாரா ஜோரம்தங்கா? மிசோரத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு 

மிசோரத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜோரம்தங்கா நான்காவது முறையாக ஆட்சி அமைப்பாரா அல்லது புதிய கட்சி ஆட்சியமைக்குமா என்பதை முடிவு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

சத்தீஸ்கரில் தேர்தல் வாக்கெடுப்புக்கு மத்தியில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தாரில் உள்ள 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

07 Nov 2023

மழை

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு தொடர போகும் மழை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.

16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

06 Nov 2023

ஹமாஸ்

பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை?

பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸை தடை செய்யும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என்று உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா?

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்திய வங்கதேச எல்லையில், தேன் கூடுகளை எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) அமைந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.