Page Loader
அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் 
அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் 

எழுதியவர் Nivetha P
Nov 07, 2023
02:54 pm

செய்தி முன்னோட்டம்

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதைய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று(நவ.,7) சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி சதீஷ்குமார் முன்னர் விசாரணைக்கு வந்தது.

ஆதரவாளர்கள் 

ஓபிஎஸ் தரப்புக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பிய நீதிபதி 

அப்போது, 'கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இது குறித்த பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்' என்று ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், 'எத்தனை முறை கால அவகாசம் கேட்பீர்கள்? எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை திரும்ப திரும்ப முன் வைப்பீர்கள்?' என்று நீதிபதி ஓபிஎஸ் தரப்பிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்ட அனைத்தையும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது என்று அதிரடியான இடைக்கால தடை உத்தரவினையும் அவர் பிறப்பித்துள்ளார்.