தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு தொடர போகும் மழை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், நேற்றிலிருந்து, இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல், தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பொழிந்தது. இன்று காலையும் பல இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும், மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம்வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர போகும் மழை
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2023-11-07-05:07:58 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கும்மிடிப்பூண்டி,மயிலாப்பூர்,புரசைவாக்கம்,சோழிங்கநல்லூர்,திருவொற்றியூர்,தண்டையார்பேட்டை,வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/KwhuGM2wF0— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 6, 2023
தொடர போகும் மழை
Convective cells along the coastal belt of Cuddalore, Mayiladuthurai, Nagapattinam, Tiruvarur, Thanjavur, Pudukkottai districts and Karaikal area pic.twitter.com/yMr6U4IeUB— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 7, 2023