மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல்
மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரரின் தாய் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள காங்சுப் சிங்கோங் கிராமத்தில் உள்ள சோதனைச் சாவடியில் செவ்வாய்கிழமை, ராணுவ வீரரின் குடும்பத்தினர் சென்ற வாகனம் சோதனை செய்வதற்காக நிறுத்தப்பட்ட போது இச்சம்பவம் நடைபெற்றது. காரில் இருந்த ஐந்தாவது நபர் ஆன ராணுவ வீரரின் தந்தை, சிஆர்பிஎப் வீரர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குகி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரான ராணுவ வீரர், மணிப்பூரில் பணியாரத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குகி-ஜோ இன மக்கள் பெரும்பான்மையாகக் வாழும் மலை மாவட்டமான காங்போக்பி எல்லைக்கும், மெய்டேய் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்பால் மேற்கு மாவட்டத்தை ஒட்டிய பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடத்தலுக்கு பின் இரண்டு மணி நேரம் நீடித்த சண்டை
ராணுவ வீரரின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட பின், குகி-சோ மற்றும் மெய்டே சமூகங்கள் இடையே 2 மணி நேரத்திற்கு துப்பாக்கி சண்டை நீடித்ததாக. தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சண்டையில் வழிப்போக்கர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். "செவ்வாய்கிழமை காலை காங்சுப் சிங்காங் கிராமத்தில் பொலிரோ காரில் வந்த 5 பொதுமக்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டனர்." "உடனே ஒரு கும்பல் தோன்றி இரண்டு பெண்கள் உட்பட நால்வரையும் கடத்திச் சென்றது. அங்கு பணியமர்த்தப்பட்டு இருந்த மத்திய பாதுகாப்புப் படையினரால் அவர்களில் ஒருவரை மட்டுமே மீட்க முடிந்தது" என தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்டவர்களை அடையாளம் கண்ட ITLF அமைப்பு
குகி-ஸோ அமைப்பான பூர்வகுடி பழங்குடித் தலைவர்கள் மன்றம் (ITLF), எல். பைஜாங் கிராமத்தை நோக்கி 5 பொதுமக்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் துப்பாக்கி ஏந்தியவர்களால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. போல்கோட் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மங்லூன் ஹாக்கிப் என்பவர், தாக்குதலின் போது ஏற்பட்ட கைகளப்பில் இறந்து விட்டதாக கருதி, கடத்தல்காரர்கள் அவரை விட்டுச் சென்றனர் எனவும், பின்னர் சிஆர்பிஎப் வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தாக ITLF கூறுகிறது. போல்கோட்டைச் சேர்ந்த நெங்கிம், 60, லைமனையைச் சேர்ந்த நீலம், 55 என்ற இரு பெண்களும், போல்கோட்டைச் சேர்ந்த ஜான் தங்கஜலம் ஹாக்கிப், 25, மற்றும் மோங்ஜாங்கைச் சேர்ந்த ஜாம்கோதாங், 40, என இரு ஆண்களும் கடத்தப்பட்டுள்ளதாக என்று ITLF தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்டவர்களை தேடி வருவதாக மணிப்பூர் காவல்துறையினர் தகவல்
மணிப்பூர் காவல் துறையினர் கடத்தப்பட்டவர்களை தேடி வருவதாக என தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர். "தப்பி ஓடியவர் உட்பட மற்ற நான்கு பேர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என போலீஸார் தெரிவித்தனர். "குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் (இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள்) சுராசந்த்பூரிலிருந்து லீமாகோங்கிற்குச் செல்லும் வழியில் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டனர்" என காவல்துறை என தெரிவிக்கின்றனர்.