
இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்திய வங்கதேச எல்லையில், தேன் கூடுகளை எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) அமைந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
நாடியா மாவட்டத்தில் பிஎஸ்எப்-இன் 32வது பட்டாலியன் படைப்பிரிவு சார்பில், முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், எல்லை பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதுடன், அங்குள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
இந்திய, வங்கதேசம் இடையே 4,096 கிலோமீட்டர் எல்லையில், 2,217 கிலோமீட்டர் மேற்கு வங்கத்தில் உள்ளது. வங்கதேசத்திலிருந்து நாடியா மாவட்டம் வழியாக தங்கம், வெள்ளி, போதை பொருட்கள் மற்றும் பசுமாடுகள் அதிகமாக கடத்தப்படுகிறது.
இதை தடுப்பதற்காகவே சீரான இடைவெளிகளில் தேன்கூடுகளை வைத்துள்ளதாகவும், அது அந்த வழியாக மனிதர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2nd card
வேலைவாய்ப்பை உண்டாக்கும் பிஎஸ்எப்
துளசி, ஏகங்கி, சத்துமுளி, அஸ்வகந்தா, சோற்றுக்கற்றாழை, கடுக்காய் போன்ற மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள், எல்லையோரப் பகுதிகளில் உள்ளூர் மக்களுடன் இணைந்து படை வீரர்களால் நடப்படுகிறது.
இவை, பிஎஸ்எப் வீரர்களின் மனைவிகளால் நடத்தப்படும் கடைகள் மூலம் விற்கப்படுகின்றன.
நாடியா மாவட்டத்தில் கடிபுர் கிராமத்தில், சமீபத்தில் தேனீக்களின் பலன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம் நடத்தப்பட்டது.
ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் பிஎஸ்எப் இந்த முயற்சியைத் தொடங்கியது. இது தேனீக்கள் மற்றும் அவற்றை அலாய் செய்யப்பட்ட "ஸ்மார்ட் வேலியில்" இணைக்கும் நிபுணத்துவத்தை வழங்கியது.
பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், தேனீ பெட்டிகள் வேலியில் சீரான இடைவெளியில் மற்றும் கடத்தல், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நிறுவப்படுகின்றன. இருப்பினும், பெட்டிகளின் சரியான எண்ணிக்கையை பிஎஸ்எப் வெளியிடப்படவில்லை.