
என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது; போலி ஆதார் கொண்டு வசித்துவந்தது அம்பலம்
செய்தி முன்னோட்டம்
இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது.
வடமாநிலத்தவர்கள் போர்வையில், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என்ற தகவல் கிடைக்கபெற்றதன் விளைவாகவே இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவரை கைது செய்தது என்.ஐ.ஏ.
போலி ஆதார் அட்டை தயாரித்து, இந்தியாவில் ஊடுருவி, இங்கே வந்து பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல, மறைமலைநகர் பகுதியில் இருவர் போலி ஆதார் வைத்திருந்தற்காக கைது செய்யப்பட்டனர்.
மறுபுறம், ஆள்கடத்தல் தொடர்பாக, இந்தியா முழுவதும் NIA சோதனை நடத்தி வருகிறது. அசாம், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது
#BREAKING || சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது
— Thanthi TV (@ThanthiTV) November 8, 2023
படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சபாபுதீன் என்பவரை கைது செய்த என்.ஐ.ஏ
போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிப்பு
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று… pic.twitter.com/qvDPWLS4jt