Page Loader
வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை
வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை

வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 08, 2023
09:31 am

செய்தி முன்னோட்டம்

இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் போர்வையில், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என்ற தகவல் கிடைக்கபெற்றதன் விளைவாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் என்.ஐ.ஏ ஆய்வு நடத்தி வருகிறது. மேலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சோதனையின் இறுதியிலேயே முழுமையான தகவல்கள் தெரியவரும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களோடு மக்களாக வசித்து வரும் இந்த மர்ம நபர்கள், தடைசெய்யப்பட்ட பல அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில், தமிழக போலீசார் பாதுகாப்புடன், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

சென்னையில் NIA சோதனை