Page Loader
ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் பலி: ஆந்திர பேருந்து நிலையத்தில் பரிதாபம் 
இந்த சம்பவம் நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் பலி: ஆந்திர பேருந்து நிலையத்தில் பரிதாபம் 

எழுதியவர் Sindhuja SM
Nov 07, 2023
06:25 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஜயவாடாவின் பண்டிட் நேரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின்(APSRTC) பேருந்து ஒன்றினால் நேற்று காலை 8:20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் ஒரு முக்கிய பேருந்து நிலையம் இதுவாகும். இந்த சம்பவம் நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

விபத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள்