தீபாவளி பண்டிகை : சென்னை-நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை
தீபாவளி பண்டிகை வரும் 12ம்.,தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சென்னை-நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படவுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மதியம் 2 மணிக்கு சென்றடைகிறது. பிறகு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்னையை இரவு 11 மணிக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலானது தாம்பரம், திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.