 
                                                                                கோவை தனியார் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது
செய்தி முன்னோட்டம்
கோவை அவிநாசி சாலையில் உள்ள புகழ் பெற்ற தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 7 இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவனிடம், அதே கல்லூரியில் படிக்கும் சில சீனியர் மாணவர்கள், மது குடிக்க பணம் கேட்டு ராகிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவன் பணம் தர மறுக்கவே, சீனியர் மாணவர்கள் அவனுக்கு மொட்டை அடித்து நிர்வாணப்படுத்தி அதனை வீடியோ எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதலாம் ஆண்டு மாணவனின் பெற்றோர், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கல்லூரியில் வந்து விசாரணை நடத்தி, 7 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
ராகிங் செய்த ஏழு மாணவர்கள் கைது
#JUSTIN || கோவை தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் ராகிங் - சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது
— Thanthi TV (@ThanthiTV) November 8, 2023
முதலாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து தாக்கி ராகிங் செய்ததாக குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார்
ராகிங் சம்பவத்தில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் 7… pic.twitter.com/i616xkfSrM