
தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது
செய்தி முன்னோட்டம்
வரும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர்-12, தீபாவளி திருநாள். இதற்காக தற்போது சென்னை நகரின் பல முக்கிய இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளிக்கு புத்தாடைகளையும், பட்டாசுகளை வாங்குவதற்காக பலர் கடைகளில் குவிகிறார்கள்.
இந்த நிலையில், தீபாவளியை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வதால், தீபாவளிக்கு மறுநாள், அதாவது, நவம்பர் 13ஆம் தேதியையும் விடுமுறை நாளாக அறிவிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின், திங்கட்கிழமை விடுமுறை நாளாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது கோயம்பேடு அனைத்து சங்க கூட்டமைப்பும், சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கமும் இணைந்து, வரும் திங்கட்கிழமை, கோயம்பேடில் உள்ள காய்கறி மார்க்கெட் செயல்படாது என அறிவித்துள்ளனர்.
அதனால், பொதுமக்கள் முன்கூட்டியே தேவைப்படும் காய்கறிகளை வாங்குவது உசிதம்.
ட்விட்டர் அஞ்சல்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லீவு
நவம்பர் 13ம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது#Koyambedu #Market #Chennai #Dinakarannews pic.twitter.com/P1ryUlIcFE
— Dinakaran (@DinakaranNews) November 7, 2023