NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை
    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை

    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Nov 07, 2023
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    அப்போது போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம், "தமிழ்நாடு மாநிலத்தில் வரும் டிசம்பர் 16ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது. அதனை மீறி இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் அவர், "தமிழகத்தில் 652 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ஒரு ஆண்டிற்கு ரூ.28.16 கோடி இழப்பீடு ஏற்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து அவர், "இதன் காரணமாகவே இனி வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்படுகிறது" என்றும் விவரித்துள்ளார்.

    அரசு 

    கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது - தமிழக அரசு 

    இதனிடையே, டிசம்பர் 16ம் தேதிக்குள் வெளிமாநில பதிவு எண்களை தமிழக பதிவு எண்ணாக மாற்றி கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசத்தினை நீடிக்குமாறு கேட்டுக்கொண்டதால் டிசம்பர் 16ம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகை காலம் துவங்கியுள்ள நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணம் மேற்கொள்வர். இதனை பயன்படுத்தி பல ஆம்னி பேருந்துகள் தங்கள் கட்டணத்தை அதிகளவு உயர்த்துவது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தால், குறிப்பிட்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    எச்சரிக்கை
    ஆம்னி பேருந்துகள்
    தீபாவளி

    சமீபத்திய

    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்

    தமிழ்நாடு

    நீலகிரியில் நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் - தோட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை  நீலகிரி
    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  கோயம்பேடு
    தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு மாநிலங்கள்
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் வாக்காளர்

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு

    ஆம்னி பேருந்துகள்

    வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் - விடுவிக்கப்படாத ஆம்னி பேருந்துகள்  ஆயுத பூஜை

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விபத்து
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025