சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
செய்தி முன்னோட்டம்
நேற்று பிற்பகல் பீகார் சட்டசபையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு குறித்து பேசும் போது, "இழிவான" மற்றும் "கொச்சையான" சொற்களை பயன்படுத்தியதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று மன்னிப்பு கேட்டார்.
பெண்களை அவமதிப்பதற்காக தான் அப்படி பேசவில்லை என்றும், தனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவர்கள் தன்னை மன்னித்துவிட வேண்டும் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் இன்று செய்தியர்களிடம் பேசும் போது கூறினார்.
பீகாரின் கருவுறுதல் விகிதம் ஏன் 4.2ல் இருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது என்பதை முதல்வர் நிதிஷ் குமார் நேற்று சட்டசபையில் விளக்கினார்.
அப்படி விளக்கும் போது, அவர் பாலியல் ரீதியான விவரங்களை விவரித்து பேசியதாகவும், கைகளால் சில கொச்சையான சைகைகளை செய்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.
லாட்ஜ்
'முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்': தேசிய மகளிர் ஆணையம்
ஒரு படித்த திருமணமான பெண் தான் கருவுறாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை அவர் நேற்று சட்டசபையில் விளக்கிய போது, பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அவரது இந்த உரையை "வெட்கக்கேடானது" மற்றும் "கொச்சையானது" என்று பாஜக, NCW உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விஷயம் குறித்து பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பாலியல் கல்வி பற்றி முதல்வர் பேசியதாக கூறினார்.ஆனால், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில், தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.