
வானிலை அறிக்கை: 14 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
அதன் பின், இது வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும்.
இதன் காரணமாகவும், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. காரணமாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் தமிழகத்தில், கனம் முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிபிட்ஜ்வ்,எ
நவம்பர் 14
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை
நவம்பர் 15
கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்
ல்டட்வ்ஸ்ம்
நவம்பர் 16
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி
நவம்பர் 17 மற்றும் நவம்பர் 18
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
நவம்பர் 19 மற்றும் நவம்பர் 20
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜஃபிடப்க
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.