
பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
பொருளாதார குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது எனவும், அவர்களை கொலை, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுடன் இணைக்க கூடாது எனவும் பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
பாஜக எம்பி பிரிஜ்லால் தலைமையிலான உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தில் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்-2023) மசோதா, பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்-2023) மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் (பிஎஸ்ஏ-2023) மசோதாக்களுடன் ஆகஸ்ட் 11 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாக்கள் மூன்றும் முறையே, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898, இந்திய தண்டனைச் சட்டம், 1860, மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872, ஆகியவற்றுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது.
2nd card
பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தப்பட கூடாது
பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 43(3) பிரிவின்படி கை விலங்குகளை பயன்படுத்துவது, சரியான முறையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கை விலங்குகளை கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்கவும், கைதின்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இருப்பினும், பொருளாதார குற்றங்கள் சிறியது முதல் தீவிரமானது வரை மாறுபடலாம் என்பதால், பொருளாதார குற்றவாளிகளை இதில் சேர்க்க கூடாது என பாராளுமன்ற நிலைக்குழு கருதுகிறது.
மேலும், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 43(3) பிரிவில் திருத்தம் மேற்கொண்டு, 'பொருளாதார குற்றங்களை' நீக்க பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
3rd car
போலீஸ் காவல் குறித்து நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள்
காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள 15 நாள் போலீஸ் காவலை, காவல்துறையினர் முழுமையாகவோ, பாதியாகவோ, 60 முதல் 90 நாட்கள் வரையிலான தடுப்பு காலம்(டிட்டன்ஷன் பீரியட்) காலத்தில், 40 முதல் 60 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பிரிவு 187(2) கூறுகிறது.
இது சில அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்படும் என்பதால், இந்த பிரிவில் திருத்தம் மேற்கொண்டு தெளிவுபடுத்த பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், பிஎன்எஸ்எஸ் 482 பிரிவில், "குற்றவாளி 15 நாட்களுக்கு பின்னும் போலீஸ் காவலுக்கு அனுப்பப்படலாம்" என சேர்க்க அக்குழு குறிப்பிட்டுள்ளது.
தற்போதுள்ள குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி, குற்றவாளி கைது செய்யப்பட்டது முதல் வரை 15 நாட்களுக்குள், அதிகபட்சமாக 15 நாட்கள் வரை போலீஸ் காவல் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.