தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில், ₹467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 11 ஆம் தேதி ₹221 கோடிக்கும், நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி நாளில் ₹246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மண்டல வாரியாக 11 ஆம் தேதி மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ₹53.73 கோடிக்கும், தீபாவளி தினத்தில் திருச்சி மண்டலத்தில் அதிகபட்சமாக ₹55.60 கோடிக்கும் மது விற்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதற்கு முந்தைய ஆண்டுகளை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு ₹464 கோடிக்கும், 2021 ஆம் ஆண்டு ₹444 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
புதிய உச்சத்தை தொடும் டாஸ்மாக் மது விற்பனை
#BREAKING | டாஸ்மாக்கில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை #Tasmac | #Diwali2023 | #Diwali pic.twitter.com/smEXGa9qq2
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 13, 2023