Page Loader
9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் அநேக பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Nov 15, 2023
03:17 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும். இதன் காரணமாகவும், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் கேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும், 9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தக்ஜகிவ்

நவம்பர் 15

கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் நவம்பர் 16 முதல் நவம்பர் 19 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நவம்பர் 20 மற்றும் நவம்பர் 21 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.