Page Loader
தீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது 
நுரையீரலை சேதப்படுத்தும் துகள்களான PM2.5 தான் இன்று முக்கிய மாசுபடுத்தியாக உள்ளது.

தீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது 

எழுதியவர் Sindhuja SM
Nov 14, 2023
10:26 am

செய்தி முன்னோட்டம்

தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதிகமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி காற்றின் தரம் பல இடங்களில் 'கடுமையானது' என்ற நிலைக்கு மாறியது. இதற்கிடையில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே அரசியல் வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி முழுவதும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லிவாசிகள் அந்த தடையை மீறி பட்டாசுகளை வெடித்ததால், நேற்று காலை டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. இதனால், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன.

தக்ஜக்

டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு

நேற்று டெல்லியின் சராசரி காற்றுத் தரக் குறியீடு(AQI) 358ஆக(மிகவும் மோசமானது) பதிவாகி இருந்தது. மேலும், நேற்று மாலை 4 மணியளவில் பதிவுசெய்யப்பட்ட 24 மணி நேர சராசரி AQI 218ஆக இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்(CPCB) தரவுகளின்படி, டெல்லியின் ஆர்.கே.புரத்தில் இன்று காலை 5 மணியளவில் சராசரி AQI 422 ஆகப்(கடுமையானது) பதிவாகியுள்ளது. நுரையீரலை சேதப்படுத்தும் துகள்களான PM2.5 தான் இன்று முக்கிய மாசுபடுத்தியாக உள்ளது. ITO இல் காற்றின் தரக் குறியீடு இன்று காலை 6 மணிக்கு 430 ஆகவும், ஜஹாங்கிர்புரியில் AQI 428 ஆகவும் பதிவாகியுள்ளது.