உலகளவில் மிகவும் மாசுபட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
செய்தி முன்னோட்டம்
நேற்று நாடு முழுவதும் பட்டாசுகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டதை அடுத்து, 3 முக்கிய இந்திய மெட்ரோ நகரங்கள் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டாப் இடத்தை பிடித்துள்ளன.
எப்போதும் போல் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை டெல்லி பிடித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு 420 AQI வாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 8வது இடத்தை மும்பையும், 10வது இடத்தை கொல்கத்தாவும் பிடித்துள்ளன.
இன்று காலை நிலவரப்படி மும்பையில் காற்று மாசுவின் அளவு 163வாகவும், கொல்கத்தாவில் 196வாகவும் இருந்தது என்று சுவிஸ் குழுவான IQAir தெரிவித்துள்ளது.
பிஜிகேல
தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து அதிகரித்த காற்று மாசு
AQIவின் அளவு 400-500க்குள் அல்லது அதற்கு மேல் இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும் மக்களையும் பாதிக்கும். அதன் அளவு 150-200க்குள் இருந்தால் அந்த மாசுபட்ட காற்று ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை தரும்.
AQIவின் அளவு 0-50க்குள் இருந்தால் மட்டுமே அது நல்லதாக கருதப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி, டெல்லி காற்றின் தரக் குறியீடு(AQI) 500க்கு மேல் இருந்தது. அதிலும் சில இடங்களில் AQI 900க்கு மேல் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, டெல்லி காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் பட்டாசு பயன்பாடு ஆகியவை இது போன்ற நகரங்களை ஆபத்தில் தள்ளி உள்ளது.