தடையை மதிக்காமல் பட்டாசு போட்ட மக்கள்: மிகவும் மோசமடைந்தது டெல்லி காற்று மாசு
செய்தி முன்னோட்டம்
நேற்று தேசிய தலைநகர் மண்டலம்(NCR) முழுவதும் உள்ள மக்கள் பட்டாசு தடையை பரவலாக மீறியதால், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் காற்றின் தரக்குறியீடு இன்று அபாயகரமான அளவை எட்டியது.
இன்று காலை நிலவரப்படி, டெல்லி காற்றின் தரக் குறியீடு(AQI) 500க்கு மேல் இருந்தது. அதிலும் சில இடங்களில் AQI 900க்கு மேல் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, டெல்லி காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
டெல்லியின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் AQI 910 ஆகவும், லஜ்பத் நகரில் 959 ஆகவும், கரோல் பாக் பகுதியில் 779 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்(CPCB) தரவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் சராசரியாக AQI சுமார் 300 ஆக இருந்தது.
பிக்வெஜ்ல்
காற்றின் தரக் குறியீடு என்றால் என்ன?
PM2.5 மற்றும் PM10 மாசு வகைகளின் அளவுகள் ரோகினி, ITO மற்றும் டெல்லி விமான நிலையப் பகுதி உட்பட பகலில் பெரும்பாலான இடங்களில் 500ஐத் தொட்டது.
காற்றின் தரக் குறியீடு(AQI) என்பது காற்று மாசுபாட்டை அளவிடுவதற்கான ஒரு அளவு குறியீடாகும்.
பொதுவாக, காற்றின் தரக் குறியீடு(AQI)
0-50 வரை இருந்தால் அது 'நல்லது' என்றும்
51-100க்குள் இருந்தால் அது 'திருப்திகரமானது' என்றும்
101-200 வரை இருந்தால் அது 'மிதமானது' என்றும்
201-300க்குள் இருந்தால் அது 'மோசமானது' என்றும்
301-400 வரை இருந்தால் அது 'மிகவும் மோசமானது' என்றும்
401-450க்குள் இருந்தால் அது 'கடுமையானது' என்றும்
450க்கு மேல் இருந்தால் அது 'கடுமையானது பிளஸ்' என்றும் கருதப்படுகிறது.