Page Loader
திருச்சி: பட்டாசை கொளுத்தியபடி, பைக்கில் வீலிங் செய்த வாலிபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து 
திருச்சி: பட்டாசை கொளுத்தியபடி, பைக்கில் வீலிங் செய்த வாலிபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து

திருச்சி: பட்டாசை கொளுத்தியபடி, பைக்கில் வீலிங் செய்த வாலிபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 14, 2023
06:19 pm

செய்தி முன்னோட்டம்

திருச்சியை சேர்ந்த 'டெவில் ரைடர்ஸ்' என்கிற குழு ஒன்று, தீபாவளி அன்று, காவேரி பாலத்தின் மீது மத்தாப்பை கொளுத்தியபடி, பைக்கில் வீலிங் செய்த வீடியோ ஒன்று வைரலானது. இதனைத்தொடர்ந்து களத்தில் இறங்கிய திருச்சி காவல்துறை, தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரையும், அதை வீடியோ எடுத்த திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில், அஜய்யை கைது செய்துவிட்டனர். மணிகண்டன் தற்சமயம் தலைமறைவாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவர் மட்டுமின்றி, திருச்சி நகரில், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் வாகனம் ஒட்டிய மேலும் 13 பேரை கைது செய்து, அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய போக்குவரத்து நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளனர் காவல்துறையினர்.

ட்விட்டர் அஞ்சல்

பைக்கில் வீலிங் செய்த வாலிபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து