Page Loader
ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
இன்று காலை 9:35 மணியளவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Nov 13, 2023
01:29 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்-நாம்பள்ளியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருக்கும் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 9 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர். விபத்தினால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, மீட்பு மற்றும் குளிரூட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மேல் மாடிகளில் வசிக்கும் மக்கள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த தரை தளத்தில் பற்றிய தீ, மளமளவென பரவி மற்ற தளங்களுக்கும் பரவியதாக தகவல்கள் கூறுகின்றன. முதற்கட்ட தகவலின்படி, கார் பழுதுபார்க்கும் பணியின் போது ஏற்பட்ட தீப்பொறியால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டக்க்வ்

பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன

"இரசாயனங்கள் தீப்பிடித்தன. ஆனால், அவை தண்ணீரால் அணைக்கப்படவில்லை." என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். இன்று காலை 9:35 மணியளவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. "தரை தளத்தில் உள்ள குடோனில் கார் பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அதனால் ஏற்பட்ட தீப்பொறி, குடோனில் வைக்கப்பட்டிருந்த ரசாயன பீப்பாய்க்கு பரவி தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கட்டிடத்தின் மற்ற தளங்களிளுக்கும் தீ பரவியது. இதனால், 6 பேர் பலியாகினர்." என்று ஹைதராபாத் மத்திய மண்டலத்தின் டிசிபி வெங்கடேஷ்வர் ராவ் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சம்பவம் நடந்த கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தை மீட்கப்படும் காட்சி